நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் சேலம் வைஸ்யா கல்லூரியில் இயங்கி வரும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 7 நாள் சிறப்பு முகாம் பூவனூர் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இதன் நான்காம் நாள் 10.02.2025 திங்கட்கிழமை அன்று இலவச ரத்த பரிசோதனை, இரத்த அழுத்தம் மற்றும் மற்றும் ரத்த வகை கண்டறிதல் முகாம் நடைபெற்றது. முகாமில் பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பயன் பெற்றனர். முன்னதாக நாட்டு நல பணி திட்ட அலுவலர் G.கணேசன் துவக்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் சௌந்தர்ராஜன் மற்றும் லோகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.


×