வைஸ்யா கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் முதல் நாள் நிகழ்வில்
வைஸ்யா கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் முதல் நாள் நிகழ்வில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பூவனூர் கிராமத்தில் பொதுமக்களிடையே போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். [4:28 pm, 8/2/2025] Hindi Ji Vysya: இளைஞர்களின் சமுதாய பொறுப்பு சேலம் வைஸ்யா கல்லூரியின் இயங்கி வரும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக அயோத்தியாபட்டினம் ஒன்றியம் பூவனூர் கிராமத்தில் ஏழு நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாம் நாள் நிகழ்வாக 08.02.2025 அன்று 'இளைஞர்களின் சமுதாய பொறுப்பு' என்ற தலைப்பில் சிறப்பு அழைப்பாளர், பாரத வெண்புறா இயக்கத்தின் நிறுவனர். ஏ. கே. பி. கதிர்வேலு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர். திரு. கணேசன், முகாமை துவக்கி வைத்து சிறப்பு அழைப்பாளரை அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்வின் இறுதியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. சௌந்தரராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
