நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்
நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் சேலம் வைஸ்யா கல்லூரியில் இயங்கி வரும் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக 7 நாள் சிறப்பு முகாம் அயோத்தியாப்பட்டிணம் ஒன்றியம் பூவனூர் கிராமத்தில் 07.02.2025 முதல் 13.02.2025 வரை நடைபெற உள்ளது. இம் முகாமின் துவக்கவிழா 07.02.2025 வெள்ளிக்கிழமை அன்று பூவனூர் கிராமத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி கட்டிடத்தில் நடைபெற்றது . இதில் மாவட்ட ஊரக வேலைவாய்ப்பு உதவி திட்ட அலுவலர் திருமதி. காந்திமதி, வட்டார வளர்ச்சி அலுவலர். திருமதி. குண லட்சுமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி கஸ்தூரி, பூவனூர் ஊராட்சி செயலர் திரு. குமார் மற்றும் வைஸ்யா கல்லூரியின் முதல்வர் முனைவர் பா. வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. கணேசன் முகாமிற்கான திட்ட அறிக்கையை வாசித்தார். இந் நிகழ்வின் நிறைவில் திரு. லோகநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
