இலக்கியப் போட்டிகள் மாநில அளவில் இரண்டாம் பரிசு
சென்னை இராமலிங்கர் பணிமன்றம் சார்பாக அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் நினைவு கலை இலக்கியப் போட்டிகள் மண்டல அளவில் கடந்த 06.09.24 அன்று பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் நம் கல்லூரியில் இரண்டாமாண்டு நுண்ணுயிரியல் துறையில் (II Bsc Microbiology) பயிலும் ம.சுபாஷ் முதல் பரிசினைப் பெற்று, ரூபாய் 5000/- பரிசுத் தொகையினைப் பெற்று வந்தார். அதன்; தொடர்பாக இரண்டாம் கட்ட போட்டிகள் மாநில அளவில் 28.09.24 அன்று இராமலிங்கர் பணிமன்றம் பொள்ளாச்சி, டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் அம்மாணவர் ம.சுபாஷ் அவர்கள் மாநில அளவில் இரண்டாம் பரிசினையும் ரூபாய் 7500/- பரிசுத்தொகையினையும் பெற்று வந்துள்ளார்.

×